கெஜ்ரிவாலை சந்திக்க முதல்வர்களுக்கு அனுமதி மறுப்பு!

ஜூன் 17, 2018 679

புதுடெல்லி (17 ஜூன் 2018): உண்ணா விரதம் இருந்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க பாஜக அல்லாத நான்கு மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

டெல்லியில், மாநில அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் அமைச்சர்களுடன் 6-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள, பாஜக அல்லாத முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி ஆகியோர், அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரை சந்திக்க முயன்றனர். எனினும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நான்கு முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...