பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு - வீடியோ

ஜூன் 17, 2018 606

விஜயவாடா (17 ஜூன் 2018): ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ரம்ஜான் பண்டிகை பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.

ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப் பட்டது. இந்நிலையில் விஜய வாடாவில் நேற்று நடைபெற்ற பெருநாள் தொழுகையில் முஸ்லிம்களைப் போலவே தொழுது சந்திரபாபு நாயுடு தொழுதார். மேலும் அவர் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களுடன் கட்டித் தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பின்பு அவர் பேசுகையில், ஆந்திர முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு ரூ 1100 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், மசூதிகளின் இமாம் மற்றும் முஅதின் முன்னேற்றத்திற்கும் அவர்களை கவுரவப் படுத்துவதற்கும் ஆந்திர அரசு முன்னோடியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...