லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

ஜூன் 18, 2018 709

புதுடெல்லி (18 ஜூன் 2018): டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நாடு முழுவதும், பல லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வலியுறுத்தியும், அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த போராட்டத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...