என் சகோதரரை சுட்டதன் பின்னணியில் பாஜக எம்.பி: டாக்டர் கஃபீல் கான்!

June 18, 2018

கோராக்பூர் (18 ஜூன் 2018): என் சகோதரரை சுட்டதன் பின்னணியில் பாஜக எம்.பி கமலேஷ் பாஸ்வான் இருப்பதாக டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசம் மாநிலம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்த நிலையில் தன் சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கான், சகோதரர் காசிஃப் (34) கடந்த வாரம் கோராக்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் காசிஃபை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்த காசிஃப் தற்போது லக்னோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் கஃபீல்கான், "என் சகோதரரை சுட்டதன் பின்னணியில் பாஜக எம்பி கமலேஷ் பாஸ்வான் மற்றும் பல்தேவ் பிளாசா உரிமையாளர் சதீஷ் நகாலியா ஆகியோர் கூலிப்படையை வைத்து இதனை செய்து உள்ளனர். என் சகோதரருக்கு வேறு யாரும் எதிரி இல்லை. நில தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகிக்கின்றேன். இதற்கு சிபிஐ விசாரணை தேவை உத்திர பிரதேச போலீஸ் விசாரணையில் எனக்கு திருப்தி இல்லை. என்று டாக்டர் கஃபீல் கான் தெரிவித்துள்ளாறர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!