சிறுவன் ஃபஹத் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

ஜூன் 20, 2018 721

காசர்கோடு (20 ஜூன் 2018): கேரள மாநிலம் காசர் கோட்டில் சிறுவன் ஃபஹத் கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளி விஜயனுக்கு (32) ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, 3 ம் வகுப்பு படித்து வந்த ஃபஹத் எனும் 9 வயது சிறுவனை அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த விஜயன் என்பவன் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தான்

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் இவ்வழக்கை விசாரித்து வந்த கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், கொடூரமான முறையில் சிறுவனை கொன்ற விஜயனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தும்நீதிபதி பி.எஸ்.சசிகுமார் உத்தரவிட்டார். குற்றவாளி விஜயன் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...