காஷ்மீரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை!

ஜூன் 22, 2018 551

ஜம்மு (22 ஜூன் 2018): காஷ்மீரில் பதுங்கியிருந்த நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுபாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்பாருக்கும் இடையே நடந்த சண்டையில் இன்று அதிகாலை 5:30க்கு நான்கு பேர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளனர். மேலும் ஒருவர் அங்கு பதுங்கியிருப்பதாகவும், தொடர்ந்து சண்டை நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...