ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொடூரமாக கொலை!

ஜூன் 23, 2018 589

குவாலியர் (23 ஜூன் 2018): மத்திய பிரதேசத்தில் ஆறு வயது சிறுமி வன்புணரப்பட்டு கொடூரமாக கொலை செய்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டம் மொரினா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குவாலியர் நகரில் நடக்கும் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு அண்மையில் சென்றனர். அவர்கள் தங்களின் 6 வயது மகளையும் உடன் அழைத்து சென்றனர். திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்த தம்பதியினர் குழந்தையை கவனிக்கவில்லை.

இதுகுறித்து போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். உடன் திருமண வீட்டிற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் ஒருவன் குழந்தையை அழைத்துச் செல்வதை கண்டனர். அவன் அழைத்து சென்ற பகுதியில் போலீசார் போய் பார்த்ததில் சிறுமியின் முகம் சிதைக்கப் பட்டு கொடூரமாக கொலை செய்யப் பட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும் குழந்தை வன்புணரப் பட்டதையும் போலீசார் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து திருமண வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...