பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் 3 மாதங்கள் சிறை!

ஜூன் 24, 2018 482

மும்பை (24 ஜூன் 2018): மஹாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப் படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பல்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பயன்பாட்டுக்கு அம்மாநில அரசு நேற்று முதல் தடை விதித்துள்ளது. தடையை மீறினால் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...