மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!

ஜூன் 25, 2018 672

ஐதராபாத் (25 ஜூன் 2018): ஐதராபாத்தில் மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஏற்கனவே விவாகரத்தான நிலையில் தனது முன்னாள் மனைவியின் வீட்டுக்கு குற்றவாளி குடி போதையில் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 12 வயது மகளை வன்புணர்ந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். மேலும் இதுகுறித்த விசாரணையின் முடிவில், கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...