நிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் கைது வாரண்ட்!

ஜூன் 25, 2018 484

புதுடெல்லி (25 ஜூன் 2018): நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளி நாட்டில் வசிக்கும் நிரவ் மோடிக்கு இ -மெயில் மூலம் கைது வாரண்ட் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷ்னல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததனர். மேலும் இதையடுத்து, இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், நிரவ் மோடியின் சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில், நிரவ் மோடி எங்கிருக்கிறார் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.

இதனிடையே, நிரவ் மோடி சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) சார்பில் குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகக்கோரி நிரவ் மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அவர் ஆஜாராகாததை அடுத்து அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த கைது வாரன்ட்டை நிரவ் மோடிக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...