பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

June 26, 2018

லண்டன் (26 ஜூன் 2018): பெண்களுக்கு பாதுகாப்பற்ற மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை கருத்துக் கேட்பின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. 193 ஐ.நா. உறுப்பினர்கள் உள்ளிட்ட 550 நிபுணர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள், குடும்ப வன்முறை, வேலையில் பாலின பாகுபாடு, திருமணத்தில் பெண் விருப்பம் நிராகரிப்பு, குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு இதே நிறுவனம மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஏழு ஆண்டுகளில் மேலும் முன்னேறி முதலிடத்தில் உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது ஆளும் அரசே காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!