பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்!

ஜூன் 26, 2018 528

புதுடெல்லி (26 ஜூன் 2018): இந்தியாவில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், 'பாஸ்போர்ட் சேவா' ஆப் மூலம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் மக்கள், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அந்த ஆப்பில் குறிப்பிடப்படும் முகவரியில் போலீசார் சரிபார்ப்பர்கள். அந்த முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். என்று தெரிவித்தார்.

மேலும் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த அப் மூலம் விண்ணப்பிக்கலாம். உரிய நடைமுறைகளுக்குப் பிறகு தபால் மூலம் பாஸ்போர்ட் நம் இருப்பிடத்திற்கு வந்துவிடும் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...