விஜய் மல்லையா திடீர் அறிவிப்பு!

ஜூன் 26, 2018 673

புதுடெல்லி (26 ஜூன் 2018): வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடியதோடு அங்கு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று திடீர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "வங்கி கடன் விவகாரம் தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 15ல் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. என்னுடைய விமான நிறுவனத்திற்கு கடன் வாங்கி கொண்டு நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் என் மீது குற்றம்சாட்டினர்.

வேண்டுமேன்றே கடனை திருப்பி செலுத்தவில்லை என வங்கிகளும் புகார் தெரிவித்தன. மேலும் என் மீது தவறான மற்றும் ஏற்று கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்தன. எனக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் செய்த தவறு காரணமாக பொது மக்களுக்கு என் மீது கோபம் அதிகரித்துள்ளது. வங்கியில் நான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். அதற்கான நடவடிக்கைகளும் எடுத்துள்ளேன்." என்று அவர் கூறியுள்ளார்.

மல்லையாவுக்கு சொந்தமான 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து இவ்வாறான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...