லாலுவுடன் மீண்டும் இணைய நிதிஷ் குமார் விருப்பம்!

ஜூன் 26, 2018 617

பாட்னா (26 ஜூன் 2018): பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் லாலு கட்சியுடனும் காங்கிரசுடனும் இணைந்து போட்டியிட்டு முதல்வரானார் நிதிஷ் குமார். ஆனால் திடீரென லாலுவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, அடுத்த நாளே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

இந்நிலையில் லாலு கட்சியுடன் மீண்டும் இணைந்து செயல்பட நிதிஷ்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை இன்னும் உறுதி செய்யப் படவில்லை.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் சர்வதேச யோகா தினத்தில் பங்கு கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...