லஞ்சம் கிடைக்காததால் கோபம் - காய்கறி கடைக்கரர் மீது போலீஸ் பொய் வழக்கு!

ஜூன் 27, 2018 662

பாட்னா (27 ஜூன் 2018): லஞ்சமாக காய்காறி கொடுக்காததால் கோபமடைந்த பீகார் போலீஸ் காய்கறி கடைக்கார சிறுவன் மீது பொய் வழக்கு போட்டு மூன்று மாதம் சிறையில் அடைத்துள்ளனர்.

பாட்னாவின் ஒரு கடைவீதியில் தந்தையுடன் சேர்ந்து காய்கறிகள் விற்பனை செய்யும் 14 வயது சிறுவனிடம் போலீசார் காய்கறிகளை இலவசமாக கேட்ட்தற்கு மறுத்துவிட்டதால் சமூக வலைதளங்களில் பிரபலமானான். இதை அவமானமாக கருதிய போலீஸ்காரர்கள், சிறுவன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

கவலையடைந்த அப்பா, மகனைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு சென்றார். அலைந்து திரிந்து பல அதிகாரிகளை பார்த்த பிறகும், யாரும் அவர் கேட்டதை கண்டுக் கொள்ளவேயில்லை. பைக் திருடிய குற்றச்சாட்டில் சுரேஷை சிறையில் வைத்திருக்கும் தகவல் அவருக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தெரிந்தது.
சுரேஷின் வயது 14 என்பதை மறைத்து, 18 வயது என்று பொய்யான தகவலை எழுதி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் போலீசார்.

விவகாரம் உள்ளூர் ஊடகங்களில் வெளியான பிறகு, மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்திய பிறகு 12 போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது சிறையிலிருந்து வெளியாகியுள்ள சிறுவனுக்கு சற்றே நிவாரணம் கிடைத்துள்ளது. எனினும் போலீசார் அந்த சிறுவனை அடித்து உதைத்தது, மூன்று மாதங்கள் சிறையில் வைத்து சித்ரவதை செய்தது இன்னும் மனதில் ரணமாக உள்ளது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...