என் மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்- முஸ்லிம் தந்தையின் குமுறல்!

ஜூன் 28, 2018 918

மீரட் (28 ஜூன் 2018): எனது நான்கு மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று உத்திர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் தந்தை ஒருவர் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அந்த தந்தை எழுதியுள்ள கடிதத்தில், தனது மகள்களுக்கு முறையே 12,14,16 மற்றும் 17 வயதாகின்றது. கடந்த சில மாதங்களாக சில இளைஞர்கள் அவர்களை துன்புறுத்தல் செய்வதாகவும், இது நாளுக்கு நாள் அது அதிகரித்து வருவதாகவும், அவரவர் குடும்பங்களில் எச்சரித்தும் பயனில்லை எனவும், சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து அட்டூழியம் செய்வதாகவும், இதன் காரணமாக தன் மகள்களை அருகிலுள்ள மதரசாவிற்கு கூட அனுப்புவதை தாம் நிறுத்திவிட்டதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் பலனில்லை என கூறப்படுகிறது. போலீசும் அந்த தந்தையிடமிருந்து புகார் வந்ததை ஒப்புக் கொண்டுள்ளது.

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...