முஸ்லிமாக மாற மறுத்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு!

June 28, 2018

ராஞ்சி (28 ஜூன் 2018): கணவர் விரும்பியதால் முஸ்லிம் மதத்திற்கு மாற மறுத்த துப்பாக்கிச் சுடும் வீராங்கணைக்கு விவாகரத்து வழங்கி ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டை சேர்ந்த ரஞ்சித் சிங் கோலி என்ற ரஹீப் அல் ஹசன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த தாரா ஷாதியோ என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் முஸ்லிமாக இருந்தாலும் அதனை மறைத்து திருமணம் செய்ததாகவும், மேலும் தாரா ஷாதியோவை முஸ்லிமாக மாற வற்புறுத்தியதாகவும், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தாரா ஷாதியோ தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

ஆனால் இவ்வழக்கை லவ் ஜிஹாத் வழக்காக எடுத்து விசாரித்த நீதிமன்றம் தாரா ஷாதியோவுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Search!