நிதிஷ்குமாருடன் கூட்டணி இல்லை - லாலு மகன் திட்டவட்டம்!

ஜூன் 28, 2018 634

பாட்னா (28 ஜூன் 2018): பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் நிதிஷ்குமாருடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று லாலு மகன் தேஜஸ்வி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பீஹாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றன. நிதிஷ்குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகினர். இருகட்சிகள் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், கூட்டணி முறிந்தது. இதையடுத்து, பாஜவுடன் கூட்டணி அமைத்து தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார் நிதிஷ்குமார்.தற்போது பாஜ-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை விமர்சிக்க தொடங்கியுள்ள நிதிஷ்குமார், கடந்த வாரம் நடந்த யோகா தின நிகழ்ச்சியை புறக்கணித்தார். மீண்டும் லாலுவுடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்துள்ள, நம்பிக்கை துரோரகம் செய்த நிதிஷ்குமாருடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என லாலுவின் மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். இதை நான் மட்டுமல்ல எங்கள் கட்சியே விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...