பாஜக தலைவரின் பாலியல் தொல்லை - சட்டசபையில் கண்ணீர் விட்ட பெண் எம்.எல்.ஏ!

ஜூன் 28, 2018 770

போபால் (28 ஜூன் 2018): தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பாஜக தலைவர் மீது மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நீலம் அபேய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய நீலம் மிஸ்ரா, "பாஜக வின் மூத்த தலைவர் ஒருவர் தன்னை பாலியல் ரீதீயாக துன்புறுத்துகிறார். மேலும் என் குடும்பத்திற்கும் மிரட்டல் வருகிறது. நான் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பூபேந்தரா சிங் , எம்.எல்.ஏ நீலம் மிஸ்ராவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப் படும் என்றும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நீலம் அபேய் மிஸ்ராவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சி பெண் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...