குடியரசுத் தலைவருக்கு நிகழ்ந்த அவமரியாதை குறித்து தாமதமான விசாரணை!

ஜூன் 28, 2018 710

புதுடெல்லி (28 ஜூன் 2018): பூரி ஜகநாத் கோவிலில் வைது குடியரசுத் தலைவருக்கு நிகழ்ந்த அவமானம் தொடர்பாக மூன்று மாதம் கழித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் 18-ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரின் மனைவி சுவீதா ஆகியோர் சென்றனர். இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக பூரி கோயிலுக்குச் சென்றார். அங்கு குடியரசுத் தலைவரையும் அவரின் மனைவியையும் 3 பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர். நாட்டின் முதல் குடிமகளான சுவீதாவை, பாதுகாவலர் ஒருவர் தள்ளிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

குடியரசுத் தலைவருக்கு நடந்த அவமரியாதை குறித்து மார்ச் 19-ம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகை, பூரி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. புகார் கடிதம் வந்து 3 மாதங்களுக்குப் பிறகே இந்த விவகாரம் தொடர்பாக பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் விசாரணையைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக கோயில் பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 20-ம் தேதி, பூரி ஆலைய நிர்வாகக் கமிட்டி கூட்டம் நடந்துள்ளது. அப்போது, மினிட் நோட்டில் குடியரசுத் தலைவர் கருவறை அருகே பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

பூரி கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பட்டியல் இன மக்களுடன் காந்தி ஒரு முறை ஜகந்நாதர் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது, பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதேபோல முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இங்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...