கேரளாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

ஜூன் 29, 2018 701

கொட்டாரக்கரை (29 ஜூன் 2018): கேரளாவில் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம்கள் மீது பசு பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் மினி லாரியில் பசுக்களை ஏற்றிவந்தவர்கள் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொட்டாரக்கரை சந்தையில் இறைச்சி வியாபாரம் செய்து வருபவர் ஜலாலுதீன். இவர் கருநாகப்பள்ளி வையாங்கரச் சந்தையிலிருந்து மினி லாரி மூலம் மாடுகளை ஏற்றி கொட்டாரக்கரை சந்தைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போது மினி லாரியை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டுபேர் கொட்டாரக்கரை ரயில்வே மேம்பாலத்தில் மினி லாரி டிரைவர் ஸாபு, ஜலாலுதீன் மற்றும் அவரின் மைத்துனர் ஜலீல் ஆகியோரை தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அங்குவந்த பொதுமக்களைக் கண்டதும் தாக்குதல் நடத்திய இருவரும் பைக்கில் தப்பிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் விஷ்ணு எஸ்.பிள்ளை, கோகுல் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட நாடுகளில் மட்டுமே இருந்து வந்த பசு பயங்கரவாதம் தற்போது தென் மாநிலங்களிலும் தலைதூக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...