பொதுமக்களுக்கு எச்சரிக்கை - ரேஷன் அட்டை ரத்தாகும் அபாயம்!

ஜூன் 30, 2018 706

புதுடெல்லி (30 ஜூன் 2018): மூன்று மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டல் ரேஷன் அட்டையை ரத்து செய்ய மத்திய அரசு பரிந்துறைத்துள்ளது.

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்,`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா? என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதனால், மானிய விலையில் கிடைக்கும் பொருள்களை வாங்க அவசியமில்லாதவர்களை எளிதில் அடையாளம் காணலாம். என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...