ராமாயணத்தை உருது மொழியில் மொழி பெயர்க்கும் முஸ்லிம் பெண்!

ஜூன் 30, 2018 566

கான்பூர் (30 ஜுன் 2018): முஸ்லிம் பெண் ஒருவர் ராமாயணத்தை உருது மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் டாக்டர்.மஹி தலாத் சித்திக். முஸ்லிம் பெண்ணான இவர் ஹிந்தி இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இவர் ராமாயணத்தை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்த மதமும் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டும் என கூறவில்லை. எல்லா மதத்தினை சேர்ந்தவர்களும் ஒன்றாக அன்புடனும் நல்ல எண்ணங்களுடனும் வாழ வேண்டும். ஒருவர் மற்றவருடை மதத்தினை மதிக்க வேண்டும். தனது பேனாவின் மூலமாக இதுபோன்ற நற்பண்புகளை பராமரிக்கும் பணியை தொடர உள்ளேன், என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...