மகனின் மரணத்தை உறுதி செய்த டூட்டி டாக்டர் - காஷ்மீரில் நடந்த துயரம்!

June 30, 2018

புலவாமா (30 ஜூன் 2018): காஷ்மீரில் வெள்ளியன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக கொல்லப் பட்டார். அவரது மரணத்தை டாக்டராக இருக்கும் அவரது தந்தையே உறுதி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் புலாவாமா பகுதியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் மீது கல்லெறிந்ததாக துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஃபாஜியான் கனி என்ற பத்தாம் வகுப்பு மாணவன் மீதும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் உடன் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்.

அங்கு டூட்டி டாக்டராக இருந்த அப்துல் கனி மகனின் உடலை பரிசோதித்து மகன் இறந்ததை உறுதி செய்ததோடு அவரே ஒப்பமிட்டு சான்றிதழ் அளித்தார். தந்தையாக இருந்தாலும் ஒரு டாக்டராக தனது பணியை செய்ததாக டாக்டர் அப்துல் கனி மிகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Search!