காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு!

ஜூலை 01, 2018 484

பெங்களூரு (01 ஜூலை 2018): மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாட அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்திருந்தார். பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள்,கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும், காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என்றும் கர்நாடகா அரசின் நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்பிக்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...