பேருந்து கவிழ்ந்து விபத்து 35 பேர் பலி!

ஜூலை 01, 2018 403

உத்தரகண்ட் (01ஜூலை 2018): உத்தரகண்ட் மாநிலம் பிபாலி-போவான் சாலையில் மினி பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

உத்ரகண்ட் மாநிலம் ராம் நகர் பகுதியில் இருந்து போவான் சென்று கொண்டிருந்த மினி பேருந்து, 45 பயணிகளுடன் பள்ளத்தில் சரிந்து விழுந்தது. அதில் 35 பேர் பலியானதாகவும், நான்கு பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்திற்கான உண்மை காரணங்கள் கண்டறியப்படவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...