முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை குறைக்க முடிவு!

ஜூலை 01, 2018 488

திருவனந்தபுரம் (01 ஜூலை 2018): கேரளாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் பிணராயி விஜயன் முடிவெடுத்துள்ளார்.

கோட்டயம் பகுதியில் ஒரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற ஒருவரின் புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளனர். பிணராயி விஜயனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி இருப்பதால் இப்போதைக்கு அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார் கூறியதை அடுத்து இது முதல்வர் பிணராயி விஜயன் பார்வைக்குச் சென்றது. இந்நிலையில் பிணராயி விஜயன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

சுமார் 350 போலீசார் முதல்வருக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் அதிலிருந்து வெறும் 40 இசட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளை மட்டுமே முதல்வர் பாதுகாப்பிற்காக வைக்க முடிவெடுத்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...