திருமணத்திற்காக காத்திருந்த பெண் - தூக்கில் தொங்கிய 11 பேர்!

ஜூலை 01, 2018 1275

புதுடெல்லி (01 ஜூலை 2018): டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கியபடி மீட்கப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ளது புராரி சாண்ட் நகர். இந்தப் பகுதியில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் குடும்பத்தினர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். அவர்கள் மளிகைக் கடையை எப்போதும் காலை 6 மணிக்கெல்லாம் திறந்து விடுவார்கள். ஆனால், இன்று 7.30 மணியாகியும் கடை திறக்கவில்லை. அதனால், அருகில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் உள்ள இரும்புக் கிரில் உத்தரத்தில், கண் மற்றும் வாயை கட்டியவாறு தூக்கில் தொங்கிய சடலங்களைப் பார்த்துள்ளனர். அவர்களது கை மற்றும் கால்கள் இறுக்கக் கட்டப்பட்டிருந்தது. 3 சிறுவர்கள், 75 வயதான ஒரு முதியவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சடலங்களைக் கைப்பற்றிய போலீஸார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவ்ர்களில் ஒருவர் பிரியங்கா சமீபத்தில் ஜூன் 17ஆம் தேதியன்று ப்ரியங்காவிற்கு நிச்சயதார்தம் நடைபெற்றது. ஆகஸ்டில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களது குடும்பத்தினரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் வேறு எதுவும் காரணம் உள்ளனவா? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...