இந்துத்வா கும்பல் பிரகாஷ் ராஜை கொலை செய்ய தீட்டிய சதித்திட்டம் அம்பலம்!

ஜூலை 01, 2018 709

பெங்களூரு (01 ஜூலை 2018): ஊடகவியலாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தது போலவே நடிகர் பிரகஷ் ராஜ் உட்பட 36 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக டைரி ஒன்று போலீசாருக்கு சிக்கியுள்ளது.

ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமுலத்தின் அடிப்படையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைதானவர்களில் கேல்' என்ற நபரிடம் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த டைரியில் பிரகஷ் ராஜ் உட்பட மேலும் 36 பேரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. மேலும் கிரிஷ் கர்நாடும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...