காஷ்மீர் சிறுமியை போல மத்திய பிரதேசத்திலும் 8 வயது சிறுமி கொடூர வன்புணர்வு!

ஜூலை 02, 2018 613

போபால் (02 ஜூலை 2018): காஷ்மீர் சம்பவம் போன்றே மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தி வன்புணர்வு செய்யப்பட்டதோடு, அவரை கழுத்தை அறுத்து வீசி சென்றுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில், டெல்லியில் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்ட சம்பவம் போன்று இந்த சிறுமியும் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார். என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வன்புணர்வில் தொடர்புடையதாக இர்ஃபான் மற்றும் ஆசிப் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று மத்திய பிரதேசத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...