ஜி.எஸ்.டி அல்ல ஆர்.எஸ்.எஸ் வரிவிதிப்பு - ப.சிதம்பரம் சாடல்!

ஜூலை 02, 2018 528

புதுடெல்லி (02 ஜூலை 2018): இந்தியாவில் விதிக்கப் பட்டுள்ள வரிவிதிப்பு ஜி.எஸ்.டி அல்ல அது ஆர்.எஸ்.எஸ் வரி விதிப்பு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை திட்டமிடப்பட்டது முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது வரை அனைத்து வகையிலும் தவறாக கையாளப் பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்த முக்கியமான கருத்துக்களை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. ஒரே வரி விதிப்பு இருந்தால் மட்டுமே அதனை ஜிஎஸ்டி என அழைக்க முடியும் என்றும், பல்வேறு வகையான வரி விதிப்புகள் உள்ளதால் இதனை ஆர்எஸ்எஸ் வரிவிதிப்பு முறை என்று வேண்டுமானால் அழைக்கலாம். என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...