ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதியை ரத்து செய்தது இந்தியா!

July 02, 2018

மும்பை (02 ஜூலை 2018): ஜெயின் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆடுகள் ஏற்றுமதியை இந்தியா ரத்து செய்துள்ளது.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!