டெல்லியில் தூக்கிட்டு உயிரிழந்த 11 பேர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள்!

July 02, 2018

புதுடெல்லி (02 ஜூலை 2018): டெல்லியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த ஒரே குடும்பத்தினர் குறித்து வீட்டில் பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய துப்பு என டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இவ்விவகாரத்தில் தற்போது பிரேசப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் 6 பேர் தூக்ககிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையின் போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் முதலில் இச்சம்பவம், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தற்கொலையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், வீட்டின் ஒரு நபர் மற்ற 10 பேரையும் தூக்கிலிட்டு கொலை செய்து அந்த 11-வது நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் தற்போது போலீஸார் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் தான் கொலை குற்றத்திற்கான வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் இவர்களது நெருங்கிய உறவினரான சுஜாதா, 'எனது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர். யாரோ என் குடும்பத்தினரை கொலை செய்துள்ளனர் போலீஸ் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!