பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் பாஜக இளைஞர் அணி தலைவர் - வைரல் போட்டோ!

ஜூலை 03, 2018 877

ஆமதாபாத் (03 ஜூலை 2018): குஜராத் பாஜக இளைஞர் அணி தலைவர் ஒருவர் இளம் பெண் ஒருவருடன் அலங்கோலமாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

தீபக் வனியா என்ற பாஜக இளைஞர் அணி தலைவர் தாய்லாந்து நாட்டு பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோ ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை இணையங்களில் வைரலானது.

குஜராத் பாஜக குழுமங்களில் முதலில் வைரலான இந்த போட்டோ பிறகு பல குழுமங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதற்கிடையே தீபக் வனியா ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். அந்த சமயத்தில்தான் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீபக் வனியா கடந்த மாதமே அவரது நடத்தை சரியில்லை என்று பாஜகவிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்திருப்பதாக பாஜக மாநில தலைமை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...