என்ன ஏது என்று கேட்காமல் ஐந்து பேரை அடித்தே கொன்ற மக்கள்!

ஜூலை 03, 2018 763

மும்பை (03 ஜூலை 2018): குழந்தை கடத்துபவர்கள் என்று சந்தேகித்து ஐந்து பேரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் மகராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ரெயின்டா பகுதியில் 5 நபர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அப்பகுதி மக்கள், அந்த 5 நபர்களும் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகித்தனர். கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றவுடன், அவர்களை மக்கள் தாக்க ஆரம்பித்தனர். உயிரிழந்த 5 நபர்களும் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலும் குழந்தை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...