கார் டிரைவரை கொடூரமாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மகன்!

ஜூலை 03, 2018 634

ஜெய்ப்பூர் (03 ஜூலை 2018): ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தான்சிங் ராவத் மகன் பொதுமக்கள் முன்னிலையில் காட் டிரைவரை கொடூரமாக தக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில். ராவத் மகன் ராஜ்வீர் வெறியோடு வாகனத்தின் ஓட்டுனரை வெளியே இழுப்பதை பார்க்கமுடிகிறது. அந்த சாலை போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது. அவரும் அவரது உதவியாளர்களும் தங்கள் காருக்கு வழிவிட்டு செல்லாமல் காரை ஓட்டிச்சென்றதாகக் கூறி அந்த காரின் ஓட்டுநரை நைய புடைக்கிறார்கள்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆனால் எம்.எல்.ஏ தரப்பு இதெல்லாம் சாதாரண பிரச்சனை அவர்களாகவே சரிசெய்து கொள்வார்கள் என்று பிரச்சனையை அமுக்கப் பார்க்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...