நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்?

ஜூலை 03, 2018 535

புதுடெல்லி (03 ஜூலை 2018): நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்துகிறது. இதற்காக, டெல்லியில் வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்திடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து பாதியளவு மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களுக்கு 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடனும் சேர்த்து தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...