அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதாக பொய் தகவல்!

July 03, 2018

ஸ்ரீநகர் (03 ஜூலை 2018): காஷ்மீர் அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு குழுவாக புறப்பட்டுச் சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சில தனியார் டாக்ஸி டிரைவர்கள் தொழில் போட்டி காரணமாக அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதாக பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

இவர்கள் மீது காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!