அலீமுத்தீன் படுகொலை வழக்கில் ஆயுள் கைதிகள் 8 பேர் ஜாமீனில் விடுதலை!

ஜூலை 03, 2018 573

ராஞ்சி (03 ஜூலை 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் அலீமுத்தீனை அடித்துப் படுகொலை செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 8 பேரை ஜார்கண்ட் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வருடம் ஜூன் 29 ஆம் தேதி அலீமுத்தீன் அன்சாரி என்ற வியாபாரி மாடுகளை ஏற்றிச் சென்றார் என குற்றம் சாட்டி பசு பயங்கரவாத கும்பல் அவரை அடித்துக் கொலை செய்தது.

இந்த படுகொலை தொடர்பாக 11 குற்றவாளிகளுக்கு மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்நிலையில் குற்றவாளிகள் 8 பேரை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அலீமுத்தீன் படுகொலை செய்யப் பட்டு முதலாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் அதே தினத்தில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது அலீமுத்தீன் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...