சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமா? பரவும் பொய் தகவல்!

ஜூலை 03, 2018 621

போபால் (03 ஜூலை 2018): மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுமி 20 வயது இர்ஃபான் மற்றும் ஆசிஃப் ஆகியோரால் வன்புணர்வு செய்யப் பட்டார். மேலும் அவர் கழுத்தில் அறுபட்ட நிலையில் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சிலர் சமூக வலைதளங்களில் இதனை வைத்து வன்முறையை தூண்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போட்டோ ஷாப் செய்யப் பட்ட புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...