வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஜூலை 03, 2018 572

புதுடெல்லி (03 ஜூலை 2018): வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நல்ல விசயத்துக்காக உறுவாக்கப் பட்ட சமூக வலைதளங்கள் சமீப காலமாக வதந்திகள் பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு இன்று எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியதாக உள்ளது.

நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...