மாட்டுக்காக படுகொலைகள் - உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

ஜூலை 04, 2018 624

புதுடெல்லி (04 ஜூலை 2018) சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

நாட்டில் மாட்டுக்காக படுகொலைகள் அதிகரித்துவிட்ட நிலையில் இந்த எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் விடுத்துள்ளது. மஹாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் நாட்டில் மாட்டுக்காக படுகொலைகளும் சித்ரவதைகளும் அதிகரித்துவிட்டன. அவரவர்கள் சட்டத்தை கையில் எடுத்து மத மோதல்களை உறுவாக்கி வருகின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மேலும் துஷார் காந்தி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர், மாட்டுக்காக நடத்தப்படும் படுகொலைகளில், குறிப்பாக, உத்திர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சென்ற வருட உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறி வருகின்றன என்று வாதாடினார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்தை கையில் எடுக்கும் குழுக்கள் தடுக்கப் பட வேண்டும். இதில் மாநில அரசுகள் கடும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். என்று கடுமையாக எச்சரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...