கள்ள நோட்டு அச்சடித்த பிரபல நடிகை கைது!

ஜூலை 04, 2018 952

திருவனந்தபுரம் (04 ஜூலை 2018): கேரளாவில் வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த பிரபல மலையாள டிவி நடிகை சூரியா சசிகுமார் கைது செய்யப் பட்டுள்ளார்.

கேரளாவில் இடுக்கி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அணக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2.5 லட்சம் கள்ள நோட்டுகளுடன் லியோ, ரவீந்திரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொல்லத்தில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கியதாகவும், அங்குள்ள ஒரு பங்களாவில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நத்திய விசாரணையில் கள்ள நோட்டுகள் அச்சடித்த ரமாதேவி மற்றும் இவரது மகள்கள் நடிகை சூரியா சசிகுமார் மற்றும் ஸ்ருதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...