நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு - குஜராத்தில் விவசாயிகள் போராட்டம்!

ஜூலை 04, 2018 583

ஆமதாபாத் (04 ஜுலை 2018): புல்லட் ரயில் திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத்தில் புல்லட் ரெயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிலையில் மக்களின் ஒப்புதலோடு அவர்களின் நிலத்தை கையகப்படுத்த முடியும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் நம்புகிறது. ஆனால் பத்து நாட்களுக்கு முன்னதாக கீடா மாவட்டத்தின் நைன்பூரில் இருந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் துவக்கினர். குஜராத்திலுள்ள 192 கிராமங்களைச் சேர்ந்த 2500 விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை விவசாயிகள் நாடியுள்ளனர் விவசாயிகள். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கான இழப்பீடு குறித்த செயல்முறை மீது விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு தற்போது இந்தியா முழுவதும் தொடங்கிவிட்ட நிலையில் விவசாயிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...