ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுட்டுக் கொலை!

ஜூலை 04, 2018 556

லக்னோ (04 ஜுலை 2018): உத்திர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

உ.பி நிகாவு பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சந்தீப் நேற்றிரவு பைக்கில் வந்துகொண்டு இருந்தபோது பைக்கில் வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து சந்தீப்பை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தீப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...