இந்தியா பாகிஸ்தான் உறவுக்கு முன்மாதிரியான ஒரு மரணம்!

ஜூலை 04, 2018 575

ஜம்மு (04 ஜூலை 2018): இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள குடும்பங்களின் உறவுக்கு இந்தியா பாகிஸ்தான் ராணுவம் உதவியதன் அடிப்படையில் இரு நாட்டு உறவுக்கு ஒரு முன்மாதியாக அமைந்தது.

ஜம்மு-காஷ்மீரின் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள காஷ்மீரில் வசிக்கின்றனர். இரு நாட்டு உறுப்பினர்களும் முறையாக விசா பெற்று அவ்வப்போது வந்து சென்று சந்தித்துக் கொள்வர்.

இந்நிலையில் 70 வயதான மூதாட்டி குல்சும் பீபீ பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜூன் 25ஆம் தேதியன்று இந்தியாவின் காஷ்மீருக்கு வந்தார். அங்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதியன்று மாரடைப்பினால் குல்ஸம் பீபீ இறந்துவிட்டார். இறந்து போனவரின் சடலத்தை பாகிஸ்தானில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு எப்படி அனுப்பி வைப்பது என்ற நெருக்கடி குல்ஸம் பீபீயின் சகோதரர் குடும்பத்திற்கு ஏற்பட்டது.

உடனடியாக, மனிதாபிமான அடிப்படையில் இந்திய ராணுவமும், உள்ளூர் போலீசும் இணைந்து ஒரே நாளில் தேவையான ஆவணங்களை தயார் செய்து, ஞாயிற்று கிழமையன்று பாகிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் குல்சும் பீபீயின் சடலத்தை ஒப்படைத்து ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியது.

சாதாரணமாக ஒரு உடலை இன்னொரு நாட்டிற்கு அனுப்ப வேண்டுமெனில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குல்சும் பீபீ உடலை பாகிஸ்தான் கொண்டு செல்ல உதவினர். என்று இரு நாட்டில் உள்ள குல்சும் பீபீ குடும்பத்தினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...