நேர்மையாக விசாரணை நடத்தப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன்: ஜாகிர் நாயக்!

ஜூலை 05, 2018 659

புதுடெல்லி (05 ஜூலை 2018): இந்தியாவில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த உறுதி அளிக்கப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன் என்று முஸ்லிம் மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக்கின் மீது அவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாக இந்திய அரசு குற்றம் சாட்டி அவர் மீது வழக்ககுப்பதிவு செய்துள்ளது. மேலும் நேரில் ஆஜராக நோட்டீசும் அனுப்பப் பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள அவர் இந்தியா வருவதாக செய்திகள் பரவின. ஆனால் இதனை மறுத்துள்ள ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. நான் நியாயமற்ற வழக்குகளில் பாதுகாப்பு இருப்பதாக உணர வில்லை. அதுவரை நான் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த திட்டமும் இல்லை.

இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது மற்றும் உண்மயானது என்று நான் உணரும்போது, நான் நிச்சயமாக எனது தாயகத்திற்குத் திரும்புவேன். என ஜாகிர் நாயக் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...