வாட்ஸ் அப் வதந்திகள் மூலம் அதிக படு கொலைகள் - அதிர்ச்சி தகவல்!

ஜூலை 05, 2018 608

புதுடெல்லி (05 ஜூலை 2018): வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் வதந்திகளே அதிக படுகொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக ABP ஊடகம் விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் நல்லவற்றிற்காக பயன்படுத்தப் படுவதாக ஒரு பார்வை இருந்தாலும் பெரும்பாலான தகவல்கள் பொய்யானதாகவே இருந்துள்ளன. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் பரப்பப் பட்ட வதந்திகளால் என்ன ஏதென்று விசாரிக்காமல் பலர் கொலை செய்யப் பட்டுள்ளனர். சென்ற ஆண்டு மட்டும் சுமார் 30 அப்பாவிகள் வாட்ஸ் அப் வதந்திகள் மூலம் மட்டுமே கொல்லப் பட்டுள்ளனர்.

தீர ஆராயாமல் திரும்ப திரும்ப அனுப்பப்படும் பொய் தகவல்கள் இன்றும் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு வதந்தி செய்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...