2 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - பெற்றோர் அதிர்ச்சி!

ஜூலை 05, 2018 653

கொல்கத்தா (05 ஜூலை 2018): மேற்கு வங்கத்தில் விளையாட்டுப் பள்ளி ஒன்றில் 2 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் விளையாட்டுப் பள்ளி ஒன்றில் பயிலும் 2 வயது சிறுவனை பள்ளி நேரம் முடிந்து அவரது தாய் அவரை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் கடுமையாக அழுதுகொண்டிருந்தார். மேலும் அவரது உடையில் ரத்தம் காணப்பட்டது. உடனே சிறுவனை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிறுவனை பரிசோதித்த டாக்டர் அதிர்ந்தார். சிறுவனின் மர்ம உறுப்புக்கள் சேதம் அடைந்திருப்பதை கண்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப் பட்டிருப்பதை மருத்துவர் உறுதி செய்தார்.

உடனே இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் அவரது தாய் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. எனவே இதுகுறித்து போலீசில் சிறுவனின் தாய் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...