காஷ்மீரில் காவலர் ஜாவித் அஹமத் தார் கடத்திக் கொலை!

July 06, 2018

ஜம்மு (06 ஜூலை 2018): ஜம்மு காஷ்மீரில் காவலர் ஜாவித் அஹமத் தார் பயங்கரவாதிகளால் கடத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அஹமத் தார். காவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு காவலர் ஜாவித் அஹமத் தார் மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த தீவிரவாதிகள் 4 பேர், காவலர் ஜாவித் அஹமது தாரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே குல்காம் பகுதியில் இன்று காலையில் காவலர் ஜாவித் அகமது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!